×

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து: தமிழக அரசு ஒப்புதல் அளிக்குமா?

மத்திய அரசு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க தமிழக அரசிடம் கருத்து கேட்டுள்ளது. மத்திய அரசு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க தமிழக அரசிடம் கருத்து கேட்டுள்ளது. சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப் பட்டால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி கிடைக்கும் மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக் கழகம் தானே முடிவெடுக்கும் உரிமை வழங்கப் படும். இவ்வாறு மாறினால்
 

மத்திய அரசு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க தமிழக அரசிடம் கருத்து கேட்டுள்ளது. 

மத்திய அரசு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க தமிழக அரசிடம் கருத்து கேட்டுள்ளது. 

சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப் பட்டால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி கிடைக்கும் மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக் கழகம் தானே முடிவெடுக்கும் உரிமை வழங்கப் படும். இவ்வாறு மாறினால் தமிழக அரசோ அல்லது பல்கலை மானியக்  குழுவோ மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் மற்றும் கல்விக் கட்டணத்தில் தலையிட முடியாது. 

மேலும், இந்த முடிவால் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும். இந்நிலையில் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.