×

அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு: நீதிமன்ற பணிகள் செயல்படுமா? முழு விவரம் உள்ளே!

தமிழகத்திலும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அப்போது 4 மற்றும் 5 ஆவது வாரங்களில் அதிவேகத்தில் பரவும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கூறினார். அதே போல தமிழகத்திலும் நேற்று மாலை 6 மணி முதல்
 

தமிழகத்திலும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அப்போது 4 மற்றும் 5 ஆவது வாரங்களில் அதிவேகத்தில் பரவும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கூறினார். அதே போல தமிழகத்திலும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு அனைத்து நீதிமன்ற பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டும் நீதிபதியின் அனுமதியுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் அந்த வழக்கு விசாரணையின் இடம் உள்ளிட்டவை வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நிர்வாக அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக பதிவாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.