×

அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள்!உங்கள யாரும் கட்டாயப்படுத்தவில்லை- குஷ்பு

தமிழகத்தில் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனிடையே முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில்
 

தமிழகத்தில் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனிடையே முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர்களில் 10 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும்.

பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் தியேட்டருக்கு நிச்சயம் வந்தே தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் நடிகர் விஜய்யை ‘மாஸ்டர்’ படத்தை விசிலடித்து, வெடிவெடித்துக் காணக் காத்திருக்கிறேன். ஈஸ்வரனில் சிலம்பரசனை பார்க்கவும் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.