×

ஃபேஸ்புக் காதல்… கல்யாணம் செய்வதாகக் கூறி ரூ.1.5 லட்சம் அபேஸ் செய்த ஆசாமி கைது!

ஃபேஸ்புக்கில் பழக்கமான பெண்ணை, காதலிப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 31). திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். பிசியோதெரப்பிஸ்டான இவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மீஞ்சூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (41) என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் பழக்கமான பெண்ணை, காதலிப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச்
 

ஃபேஸ்புக்கில் பழக்கமான பெண்ணை, காதலிப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 31). திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். பிசியோதெரப்பிஸ்டான இவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மீஞ்சூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (41) என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பழக்கமான பெண்ணை, காதலிப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 31). திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். பிசியோதெரப்பிஸ்டான இவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மீஞ்சூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (41) என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஃபேஸ்புக்கில் சேட் செய்து வந்த இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சியாமளாவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஜெயச்சந்திரன் பழகியுள்ளார். அவரிடமிருந்து நகை, பணம் வாங்கி தாராளமாக செலவு செய்துவந்துள்ளார். 

கொஞ்ச நாட்களாக சியாமளாவுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார் ஜெயச்சந்திரன். ஒரு கட்டத்தில் முற்றிலுமாக பேசுவதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து தொடர்புகொண்டு ஜெயச்சந்திரனை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சியாமளா, மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். ஜெயச்சந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.