×

‘ஃபஸ்ட் காலேஜ் நெக்ஸ்ட் தான் மேரேஜ் ‘ : காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

மகளை மீட்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். மதுரை: காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி விடுதியில் தங்கி படிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 18 வயதான எனது மகள் 19 வயது இளைஞருடன் சென்றுவிட்டாள். அதனால் அவளின் கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மகளை மீட்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி
 

மகளை மீட்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

மதுரை: காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி விடுதியில் தங்கி படிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நெல்லையைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 18 வயதான எனது மகள் 19 வயது இளைஞருடன் சென்றுவிட்டாள். அதனால் அவளின் கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மகளை மீட்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மாணவி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் பெற்றோர் தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும்  மாணவியைத் தொடர்ந்து படிக்க வைக்க ஒத்துழைப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு  நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். அப்போது மாணவி பெற்றோருடன் செல்ல விரும்பாததால், மாணவி விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்றுவர வேண்டும் என்றும் 21 வயது பூர்த்தியான நிலையில்  பெற்றோர் விருப்பத்தைப் பெற்று பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றனர். மேலும்  முதலில் படிப்பு, பின்பு தான்  திருமணம் என்று கண்டிப்பாகக் கூறினர்.