×

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் பல சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, ஆன்லைனில் ’ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு. அதை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால், இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி மனஉளைச்சலில் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.எனவே
 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் பல சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, ஆன்லைனில் ’ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு. அதை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால், இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி மனஉளைச்சலில் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.எனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்ற இளைஞர் தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான இவர் ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பணத்தை இழந்துள்ளார். இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலில் இருந்து வந்த மதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.