×

கொரோனாவால் வேலை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்லில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வேலை போனதால், தனது சொந்த கிராமத்தில் இருந்த வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் இருபத்தி மூன்று வயது மகன் சுரேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த வருடம் வேலையை விட்டு தனது சொந்த கிராமம் குட்டத்திலேயே தங்கியிருந்தார். வேலையின்றி வருவாய் இல்லாமலிருந்த
 

திண்டுக்கல்லில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வேலை போனதால், தனது சொந்த கிராமத்தில் இருந்த வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் இருபத்தி மூன்று வயது மகன் சுரேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த வருடம் வேலையை விட்டு தனது சொந்த கிராமம் குட்டத்திலேயே தங்கியிருந்தார்.

வேலையின்றி வருவாய் இல்லாமலிருந்த சுரேஷ், மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் இவருக்கு உடல்நிலை குறைபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கூத்தாங்கல்பட்டியில் தனது பாட்டி வீட்டில் இருந்த சுரேஷ் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் காவல்துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.