×

தமிழகத்தில் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுமா?.. வெளியான தகவல்!

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி(நாளை) முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட்,
 

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி(நாளை) முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல வழிப்பாட்டு தலங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து கடந்த 3 ஆம் தேதி மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்திய போது, வழிபாட்டு தலங்களை திறக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த இக்கட்டான சூழலில் வழிபாட்டு தலங்களை திறக்க எந்த வழிகாட்டுதலும் வெளியிடப்படவில்லை. அதனால் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? திறக்கப்படாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.