×

இனி இவர்களும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம்!

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகள், சென்னை விமான நிலையத்தை சென்றடைய வேண்டிய விமான பயணிகள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம் சென்னையில் “work man special” எனப்படும் புறநகர் சிறப்பு ரயில், அத்தியாவசிய பணியில் உள்ள அரசு உழியர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன உழியர்களும் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் சிலர் பயணிப்பதற்கான அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இயக்கம் மற்றும்
 

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகள், சென்னை விமான நிலையத்தை சென்றடைய வேண்டிய விமான பயணிகள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம்

சென்னையில் “work man special” எனப்படும் புறநகர் சிறப்பு ரயில், அத்தியாவசிய பணியில் உள்ள அரசு உழியர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன உழியர்களும் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேலும் சிலர் பயணிப்பதற்கான அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இயக்கம் மற்றும் பராமரிப்பு சார்ந்த தனியார், அரசு ஊழியர்களும் புறநகர் ரயில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி, போக்குவரத்து, வர்த்தகம், இயந்திரங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல், அத்தியாவசிய தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பயணிக்கலாம். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகள், சென்னை விமான நிலையத்தை சென்றடைய வேண்டிய விமான பயணிகள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம். இது போன்ற புதிய அறிவிப்புகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தற்போது இயங்கி வரும் 154 புறநகர் ரயில் சேவையுடன் மேலும் 50 புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் சென்னையில் மொத்தம் 204 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.