×

தந்தைக்காக தூக்கில் தொங்கிய பெண்…அதிர வைக்கும் பின்னணி!!

உடல்நிலை சரியில்லாத தனது தந்தைக்காக அவரது மகள் ஒருவர் உயிரை தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியை சேர்ந்த அம்மன் சேகர் என்பதும்,அவரை பவித்ரா என்ற 23 வயது இளம்பெண்
 

உடல்நிலை சரியில்லாத தனது தந்தைக்காக அவரது மகள் ஒருவர் உயிரை தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியை சேர்ந்த அம்மன் சேகர் என்பதும்,அவரை பவித்ரா என்ற 23 வயது இளம்பெண் கொலை செய்ததையும் கண்டுபிடித்தனர். தோழியின் தந்தையான சேகருடன் பி.காம் பட்டதாரி பெண்ணான பவித்ரா ஐந்து ஆண்டுகளாக உறவு வைத்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சேகர் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது .சேகர் பவித்ராவுடன் பழகி வருவதை கண்டு பிடித்த பவித்ராவின் குடும்பத்தினர், அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் சேகர், தான் எடுத்து வைத்த புகைப்படங்களை வைத்து பவித்ராவை மிரட்டியதால் பவித்ரா சேகரை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பவித்ரா சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து வீட்டில் இருந்துள்ளார்.

இந்த சூழலில் பவித்ராவின் தந்தை பாஸ்கருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலையால் கல்லீரல் பாதிக்கப்பட்டதுடன், பாஸ்கருக்கு இதயத்தில் துளை இருந்துள்ளது. ஏற்கனவே பட்டம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த பவித்ரா கடுமையான மன உளைச்சலில் இருந்த நிலையில் ,தனது தந்தையை காப்பாற்ற தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், அத்துடன் அவர் எழுதி வைத்த கடிதத்தில் என் இதயம் மற்றும் கல்லீரலை எனது தந்தைக்கு தானமாக கொடுத்து விடுங்கள். நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா; எங்கு தேடினாலும் உங்களைப் போன்ற ஒரு அப்பா கிடைக்காது, நான் குற்றவாளியோ நிரபராதியோ இனிமேல் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலஅறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.