×

விப்ரோ நிறுவனம் லாபம் ரூ.3,242 கோடி… வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி

விப்ரோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,242.6 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,242.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 35.7 சதவீதம் அதிகமாகும். முந்தைய மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். விப்ரோ
 

விப்ரோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,242.6 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,242.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 35.7 சதவீதம் அதிகமாகும். முந்தைய மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.

விப்ரோ

விப்ரோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் வருவாயாக ரூ.18,252.4 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் வருவாயாக ரூ.14,913.1 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. விப்ரோ நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 2.09 லட்சமாக உள்ளது.

விப்ரோ

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, விப்ரோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.52 சதவீதம் உயர்ந்து ரூ.575.75ஆக இருந்தது.