×

தமிழகத்தில் இ-பாஸ் ரத்தா? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல நடைமுறைகளை அமல்படுத்தி வந்தாலும் இ-பாஸ் என்ற நடைமுறை பெரிதும் உதவிக்கரமாக இருந்தது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்ததால் மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவலும் கட்டுக்குள் வந்தது. ஆனால் இபாஸ் நடைமுறையால் எளிதில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளுக்காக சொந்த மாவட்டத்திற்கு அல்லது மற்ற மாவட்டத்தில் இருந்த இன்னொரு மாவட்டத்திற்கும் செல்ல முடியவில்லை என பொதுமக்கள்
 

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல நடைமுறைகளை அமல்படுத்தி வந்தாலும் இ-பாஸ் என்ற நடைமுறை பெரிதும் உதவிக்கரமாக இருந்தது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்ததால் மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவலும் கட்டுக்குள் வந்தது.

ஆனால் இபாஸ் நடைமுறையால் எளிதில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளுக்காக சொந்த மாவட்டத்திற்கு அல்லது மற்ற மாவட்டத்தில் இருந்த இன்னொரு மாவட்டத்திற்கும் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். இதனால் திருமணம், இறப்பு, மருத்துவத் தேவை போன்றவற்றிற்கு மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதனிடையே இ பாஸ் நடைமுறையின் மூலம் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்தை தடை செய்யக்கூடாது என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இபாஸ் நடைமுறை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையின் முடிவில் இபாஸ் நடைமுறை தொடருமா? அல்லது நீக்கப்படுமா என்பது தெரியவரும்.