×

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி: விறகு எடுக்கச் சென்ற போது நேர்ந்த விபரீதம்!

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் வசித்து வரும் இருளர் பழங்குடியினப் பெண் சரஸ்வதி (65) தனது மகன் மற்றும் மகளுடன் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கே காட்டு யானை ஒன்று வந்திருக்கிறது. யானையைக் கண்ட பீதியில் சரஸ்வதியின் மகளும், மகனும் பயந்து ஓட, சரஸ்வதி யானையின் பிடியில் சிக்கிக் கொண்டார். சரஸ்வதியை காட்டு யானை
 

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் வசித்து வரும் இருளர் பழங்குடியினப் பெண் சரஸ்வதி (65) தனது மகன் மற்றும் மகளுடன் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கே காட்டு யானை ஒன்று வந்திருக்கிறது. யானையைக் கண்ட பீதியில் சரஸ்வதியின் மகளும், மகனும் பயந்து ஓட, சரஸ்வதி யானையின் பிடியில் சிக்கிக் கொண்டார்.

சரஸ்வதியை காட்டு யானை பலமாக தாக்கியதால், சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சரஸ்வதியின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் இதுவரை 5 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.