சென்னையில் 49 இடங்களில் WI-FI இலவசம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் 49 இடங்களில் Wi-Fi வசதியை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள Wi-Fi வசதியை (smart city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் இலவசம் என்றும் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஒடிபி மூலம் இலவச வைஃபை சேவை பெறலாம். 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://chennaicorporation.gov.in/gcc/ என்ற தளத்தில் சென்று பார்க்கலாம்.
மூலக்கடை பேருந்து நிலையம் ,சென்ட்ரல் ரயில்வே நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், அண்ணா சதுக்கம் அருகே டிராபிக் பூங்கா, அம்பத்தூர் பழைய டவர் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, மெரினா கடற்கரை எழிலகம் எதிரில், பொதுத்துறை அலுவகம் எதிரில் ,கண்ணகி சிலை அருகில் ,நேதாஜி சிலை அருகில் ,விவேகானந்தர் இல்லம் எதிரில், கலங்கரை விளக்கம் அருகில் ,தியாகராய நகர் ஜீவா பூங்கா ,நடேசன் பூங்கா, அசோக் பில்லர், நங்கநல்லூர் சுதந்திர தின பூங்கா ,திருவான்மியூர் கடற்கரை ,தாமரைக்குளம் பூங்கா பள்ளிக்கரணை உள்ளிட்ட 49 இடங்களில் இலவச வைஃபை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.