×

“குழந்தை பிறந்த நேரம் சரியில்லை; பாட்டியின் உயிருக்கு ஆபத்து” ஜோதிடரின் வாக்கால் நடந்த விபரீதம்

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறியதால் கணவனே , கைக்குழந்தையுடன் மனைவியை வீட்டை விட்டு அடித்து துரத்திய சோக சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருக்கும் இரும்பாலையை சேர்ந்த் கௌசல்யாவுக்கும் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் வெங்கடேசன்- கவிதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும்
 

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறியதால் கணவனே , கைக்குழந்தையுடன் மனைவியை வீட்டை விட்டு அடித்து துரத்திய சோக சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருக்கும் இரும்பாலையை சேர்ந்த் கௌசல்யாவுக்கும் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் வெங்கடேசன்- கவிதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் குழந்தை வீட்டில் இருந்தால் வெங்கடேசனின் தாயின் உயிருக்கு ஆபத்து என்றும் ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. மேலும் குழந்தை குடும்பத்திற்கே ஆகாது என்றும் ஜோதிடர் கூறியதால் கூறியதால் குழந்தையின் தந்தை வெங்கடேசன், கைக்குழந்தையுடன் மனைவி கௌசல்யாவை வீட்டைவிட்டு அடித்து துரத்தியுள்ளார். இதனால் வேதனை அடைந்த கௌசல்யா, தனது கணவர் மீது இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெங்கடேசனை அழைத்த போலீசார், இருவரும் சேர்ந்துவழுமாறு கூறி அனுப்பியுள்ளனர். ஆனாலும் மீண்டும் வெங்கடேசன் தனது குழந்தை மற்றும் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

இதனால் செய்வதறியாமல் தவித்த இளம்பெண் கௌசல்யா, நீதி கேட்டு இன்று தனது குழந்தை மற்றும் தாய் செல்வியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். தனது குழந்தையை கொன்று விட வேண்டும் என கணவன் வெங்கடேசன் முயற்சி செய்து வருகிறார் என்றும், தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.