×

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர்,
 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது .

மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 23ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.