×

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள்?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்து 589 ஆக பதிவானதை சுட்டிக் காட்டி மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத் துறை தகவல் கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையை பொருத்தவரையில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 676 பேர் குணமான
 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்து 589 ஆக பதிவானதை சுட்டிக் காட்டி மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத் துறை தகவல் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னையை பொருத்தவரையில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 676 பேர் குணமான நிலையில், 6,105 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 47 ஆயிரத்து 667 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் 31 ஆயிரத்து 252 பேர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை பொருத்தவரையில் 30 வயதிலிருந்து 39 வயதுக்குட்பட்ட நபர்கள் 21. 84 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக 40 இல் இருந்து 49 வயதுக்குட்பட்டவர்கள் 17.95% பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 9 வயதுக்குட்பட்ட சிறார்கள் 2.36 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன் அதிகபட்சமாக அம்பத்தூரில் 4,622 பேரும், அண்ணாநகரில் 5253 பேரும், தேனாம்பேட்டையில் 3902 பேரும், கோடம்பாக்கத்தின் 4 ஆயிரத்து 619 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறைந்தபட்சமாக மணலியில் ஆயிரத்து 18 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.