×

தமிழகத்தில் கோயில்கள் திறப்பது எப்போது? அமைச்சர் சேகர் பாபு தகவல்!

தமிழகத்தில் கோயில்கள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.கோயில்களில் மக்கள் கூட்டம் காரணமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதற்காக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா தற்போது குறைந்து வரும் காரணத்தினால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயில்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக
 

தமிழகத்தில் கோயில்கள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.கோயில்களில் மக்கள் கூட்டம் காரணமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதற்காக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா தற்போது குறைந்து வரும் காரணத்தினால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயில்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும். திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் ரோப்கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புனரமைக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.முன்னதாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ள நிலையில் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.