×

வெல்டர், பிட்டர், ஹெல்பர்களுக்கு வாரம் 3 குவார்ட்டர்

டாக்டர், இன்ஜினியர் மாப்பிள்ளைகளுக்கு நல்ல மரியாதை கிடைக்கும், வருமானம் கிடைக்குமா? என்று கேட்கிற நிலைமைதான் இப்போது உள்ளது. நல்ல இன்ஜினியரிங் காலேஜில் லட்சங்களை கட்டி படித்தாலும் வேலை இல்லை என்பதால், இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். ஆனால், இன்ஜினியரிங் படித்தவர்கள் இருக்கும் அளவுக்கு வெல்டர், பில்டர் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பதை நம்பத்தான் வேண்டாம். அப்படி கண்ணில் பட்ட பேனர்தான் இது. சம்பளம் தினசரி வழங்கப்படும் என்பது நியாமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு கீழே எழுதி இருப்பதுதான்
 

டாக்டர், இன்ஜினியர் மாப்பிள்ளைகளுக்கு நல்ல மரியாதை கிடைக்கும், வருமானம் கிடைக்குமா? என்று கேட்கிற நிலைமைதான் இப்போது உள்ளது. நல்ல இன்ஜினியரிங் காலேஜில் லட்சங்களை கட்டி படித்தாலும் வேலை இல்லை என்பதால், இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். ஆனால், இன்ஜினியரிங் படித்தவர்கள் இருக்கும் அளவுக்கு வெல்டர், பில்டர் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பதை நம்பத்தான் வேண்டாம்.


அப்படி கண்ணில் பட்ட பேனர்தான் இது. சம்பளம் தினசரி வழங்கப்படும் என்பது நியாமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு கீழே எழுதி இருப்பதுதான் விநோதம். வாரம் முழுவதும் வேலைக்கு வந்தால் 3 குவார்டர் மது பாட்டில் வழங்கப்படுமாம். வேலை வேண்டும் என்பவர்கள் அழைப்பதற்கு மொபைல் எண்ணும் அளித்துள்ளனர்.


உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்றால், குடிப்பழக்கம் இருக்கும் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது குடி பழக்கம் இல்லாத தொழிலாளர்களுக்கு குடிக்கும் ஆசையை தூண்டுகிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?
ஆனால், என்னதான் இருந்தாலும், வேலை வேண்டும் என்பவர்கள் இந்த நம்பரில் கூப்பிடலாம் என்றால், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த விளம்பரமாம். இப்போதும் சுற்றி வருகிறது என்றார் அந்த எண்ணில் பேசியவர். இந்த லாக்டவுன் காலத்தில் எத்தனை பேர் ஏமாற உள்ளார்களோ…