×

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் சுகாதார பணிகள் இணை இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இரண்டாவது கட்டமாக இந்த வைரஸின் வீரியம் அதிகமாக உள்ளது தற்போது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் முதலில் சென்னை பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் மூலம் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது தற்போது இ பாஸ் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து
 


ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இரண்டாவது கட்டமாக இந்த வைரஸின் வீரியம் அதிகமாக உள்ளது தற்போது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் முதலில் சென்னை பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் மூலம் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது தற்போது இ பாஸ் தளர்வு

அளிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர் ஈரோடு பொருத்தவரை முதியவர்களை அதிக அளவு வைரஸ் தாக்கி வருகிறது இதனால் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் ஈரோட்டில் மேலும் 126 பேருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2735 ஆக உயர்ந்தது நேற்று ஒரே நாளில் 57 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு சென்றனர் இதன் மூலம் மொத்தம் 1483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது ஆயிரத்து 214 பேர்

சிகிச்சையில் உள்ளனர் நேற்று வரை மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிசியா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது மிஷன் ஜீரோ திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது எனினும் வைரஸ் குறைந்தபாடில்லை இப்பவும் பொதுமக்களில் சிலர் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியாமல் செல்வதை காணமுடிகிறது பொதுமக்கள் அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர்

சவுண்டம்மாள் கூறும்போது , ஈரோடு மாவட்டத்தில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் ஈரோடு மாவட்டத்தில் தற்போது வைரசால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான் வயது முதிர்வு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது மேலும் பல்வேறு நோய்களாலும் அவதிப்பட்டு வருகின்றனர் எங்களைப் பொறுத்தவரை எண்ணிக்கை காட்டிலும் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

– ரமேஷ் கந்தசாமி