×

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தும் இந்து முன்னணி கட்சியினர்!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு விநாயகர் ஊர்வலத்துக்கும் பொது இடங்களில் சிலை வைக்கவும் அரசு தடை விதித்தது. அதனால் இன்று தமிழக மக்கள், அவரவர் வீடுகளிலேயே விநாயகர் வைத்து வழிபட்டு வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவுக்கு பாஜகவும் இந்து முன்னணி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடையை மீறி சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணி கட்சியினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், பொது இடங்களில் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி
 

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு விநாயகர் ஊர்வலத்துக்கும் பொது இடங்களில் சிலை வைக்கவும் அரசு தடை விதித்தது. அதனால் இன்று தமிழக மக்கள், அவரவர் வீடுகளிலேயே விநாயகர் வைத்து வழிபட்டு வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவுக்கு பாஜகவும் இந்து முன்னணி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடையை மீறி சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணி கட்சியினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், பொது இடங்களில் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி தரவில்லை. மேலும் தடையை மீறி சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து முன்னணி கட்சியினர், கோவையில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்தனர். அந்த சிலைகள் அனைத்தையும் போலீசார் இன்று காலை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அவர்கள் ஊர்வலம் தொடர்கிறது.