×

சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது – தமிழக அரசு உத்தரவு!

கொரோனா பரவக்கூடும் என்பதால் சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்களை நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, உழைப்பாளர் தினம் உள்ளிட்ட 4 முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக கிராம சபை கூட்டங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. கொரனோவை காரணம் காட்டி கடந்த அதிமுக அரசு கிராமசபை கூட்டங்களை ரத்து செய்த போது, ஜனநாயக குரல்வளையை அதிமுக அரசு நசுக்குவதாக
 

கொரோனா பரவக்கூடும் என்பதால் சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்களை நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, உழைப்பாளர் தினம் உள்ளிட்ட 4 முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக கிராம சபை கூட்டங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. கொரனோவை காரணம் காட்டி கடந்த அதிமுக அரசு கிராமசபை கூட்டங்களை ரத்து செய்த போது, ஜனநாயக குரல்வளையை அதிமுக அரசு நசுக்குவதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் கண்டனக் குரல் எழுப்பினார்.

கிராம ராஜ்யத்தின் உயிர்நாடியாக திகழும் கிராமசபை கூட்டங்களில் நடத்துவதற்குக் கூட வக்கற்ற அதிமுக அரசு தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், தேர்தல் நேரத்தில் தடையை மீறி கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார். அன்று அதிமுக அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், இன்று கொரோனாவை காரணம் காட்டி அவரே கிராம சபை கூட்டங்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதன் படி, கொரனோ பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என பஞ்சாயத்துராஜ் இயக்குனர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். இதனை அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட திமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.