×

‘ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு’.. பணியை இழந்த கிராம நிர்வாக அலுவலர்!

விழுப்புரம் அருகே காந்தலவாடி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு சொந்தமான 4 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்பதால், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மகாலட்சுமி சரவணனிடம், ரூ.2 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு சரவணன் ஒப்புக் கொள்வது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, மகாலட்சுமி லஞ்சம் கேட்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் அளித்துள்ளார்.
 

விழுப்புரம் அருகே காந்தலவாடி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு சொந்தமான 4 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்பதால், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மகாலட்சுமி சரவணனிடம், ரூ.2 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு சரவணன் ஒப்புக் கொள்வது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, மகாலட்சுமி லஞ்சம் கேட்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், சரவணனிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து அனுப்பிய அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்துள்ளனர். பின்னர், சரவணன் அந்த பணத்தை கொடுக்கும் போது மகாலட்சுமியை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாய்வர்ஷினி கவனத்துக்கு எட்டியுள்ளது. அதன் படி, துறை ரீதியான நடவடிக்கை எடுத்த அவர், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.