×

7 பேர் விடுதலை: ஆளுநரின் கருத்து கண்டனத்துக்குரியது- விஜயகாந்த்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்ததாகவும், ஆனால் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்ததாகவும், ஆனால் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என ஆளுநர் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்,முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும், காலதாமதம் செய்யாமல் நல்ல தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.