×

மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் வலம்வரும் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பிய அவர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல்
 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் வலம்வரும் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பிய அவர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பரப்புரையில் கலந்து கொண்ட அவர், உடல்நிலையை கருத்தில் கொண்டே தேர்தலிலும் போட்டியிடவில்லை.