×

கீழே கிடந்த மாஸ்க்கை அணிந்த இளைஞர் : ஒட்டுமொத்த குடும்பமும் கொரோனா பிடியில் சிக்கியது!

வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகர் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க தாய், தந்தை மற்றும் 20, 19 வயது முறையே உள்ள மகன்கள் மற்றும் 15 வயது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடம் கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்று விசாரணையில்
 

வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகர் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க தாய், தந்தை மற்றும் 20, 19 வயது முறையே உள்ள மகன்கள் மற்றும் 15 வயது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடம் கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்று விசாரணையில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. காரணம் காட்பாடி பகுதியில் உள்ள ஒட்டபிள்ளையார் தெரு பகுதியில் மேற்கூறிய 20 வயதான மகன் முக கவசம் அணியாமல் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். முக கவசம் அணியாமல் சென்றால் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என பயந்து அந்த இளைஞர் கீழே கிடந்த முக கவசத்தை எடுத்து அணிந்து சென்று உள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த இவர் தான் அணிந்திருந்த மாஸ்கால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொரோனா வைரஸை பரப்பியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் குறைந்த விலையிலான மாஸ்க்குகளை அபராதம் பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு அளித்தால் இதுபோன்ற ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து போராடி வரும் நிலையில், மக்கள் அலட்சியம் செய்யாமல் முக கவசம் அணிந்து செல்வது அவசியம் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது.