×

ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்கனும்… ஆன்லைனில் பள்ளிக்கட்டணம் கட்ட சொல்லி டார்ச்சர் செய்யும் வேலம்மாள் பள்ளிக்கூடம்!

கொரோனா தடை உத்தரவு காரணமாக, பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஊரடங்கால் பல பெற்றோர் வேலை இழந்துள்ளதால் கட்டணத்தை கட்டமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
 

கொரோனா தடை உத்தரவு காரணமாக, பள்ளிகளைத் திறக்‍க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஊரடங்கால் பல பெற்றோர் வேலை இழந்துள்ளதால் கட்டணத்தை கட்டமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கூடம் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கட்டண வசூலில் களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக பெற்றோருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த செய்தியில், “அன்பான பெற்றோர்களே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த எதிர்பாராத ஊரடங்கின்போதும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களை கல்வி ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்க பள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது. வீடியோக்கள், ஆன்லைன் வகுப்புகள் மூலம் எங்கள் பள்ளி குழந்தைகளின் கல்விக்கு அசிரியர்கள் உதவி புரிகின்றனர். அடுத்த கட்டமாக அனைத்து வகுப்புகளுக்கும் மெய்நிகர் பள்ளி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதனால் அதற்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அந்த தொகை எங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும்.

அனைத்து கட்டணங்களும் இப்போது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். www.velamalnexus.com என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் பணம் செலுத்தலாம். அல்லது பள்ளி கிளைகளில் கிடைக்கும் காசோலைகள் மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.