×

சொந்த ஊருக்கு புறப்பட்டது கன்னியகுமரி எம்.பி வசந்த் குமாரின் உடல்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானர். மருத்துவமனையில் இருந்து அவர் மீண்டு வந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும்
 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானர். மருத்துவமனையில் இருந்து அவர் மீண்டு வந்து விடுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, வசந்தகுமாரின் உடல் சென்னை திநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் வசந்த்& கோ ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக அவரது உடலை வைக்க அனுமதி வழங்கப்படாததால் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி எம்பி வசந்த்குமாரின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறது.