×

உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கிடைத்தது!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளையின போலீசார் தாக்குதல் நடத்துவது வழக்கமான விஷயமாகவே இருந்தது. நிறவெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். அது ஒருவரின் இறப்பு வரை மட்டும் தான். அதற்குப் பின் ஒட்டுமொத்த அமெரிக்காவை அச்சம்பவம் மாற்றியமைத்தது. அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ஜார்ஜ்
 

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளையின போலீசார் தாக்குதல் நடத்துவது வழக்கமான விஷயமாகவே இருந்தது. நிறவெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். அது ஒருவரின் இறப்பு வரை மட்டும் தான். அதற்குப் பின் ஒட்டுமொத்த அமெரிக்காவை அச்சம்பவம் மாற்றியமைத்தது. அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட்.

மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர் காவல் வாகனத்தில் ஏற மறுக்கவே, அப்போது ஒரு போலீஸ்காரர் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. நிறவெறியினால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதால் அவரது இறப்புக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

டெரிக் சாவின், டார்னெல்லா

இதையடுத்து பிளாய்டின் உறவினர்கள் நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடினர். அதற்குப் பிறகு பிளாய்டை கொலைசெய்த டெரிக் சாவின் என்ற போலீஸார் உட்பட நான்கு பேரை பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெரிக் சாவின் குற்றவாளி என்று உறுதியானதால் 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வாசித்துள்ளது. சமீபத்தில் இந்த கொடூர சம்பவத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய டார்னெல்லா ஃபிரேசியர் என்ற பெண்ணுக்கு மிக உயர்ந்த புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அதே வீடியோ தான் பிளாய்டுக்கும் நீதி வாங்கி கொடுத்திருக்கிறது.

கறுப்பினத்தவர் மீதான பாரபட்சம், தாக்குதலை எதிர்த்து அவர்களின் உயிர்களுக்கும் மதிப்பு இருக்கிறது; அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BlackLivesMatter என்ற மக்கள் இயக்கம் தொடங்கியது. சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்துக்கு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் உலகம் முழுவதும் கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டது.