×

மறைந்த காடு வெட்டி குரு வீட்டில் உதயநிதி ஸ்டாலின்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள மறைந்த பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் காடுவெட்டி குருவின் தாய் கல்யாணியிடம் நலம் விசாரித்து குருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வன்னியர் சமுதாய மக்களின் பலமான பிரபலமாகத் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு.இவரது இயற்பெயர் குருநாதன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில்,
 

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள மறைந்த பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் காடுவெட்டி குருவின் தாய் கல்யாணியிடம் நலம் விசாரித்து குருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

வன்னியர் சமுதாய மக்களின் பலமான பிரபலமாகத் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு.இவரது இயற்பெயர் குருநாதன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், பிறந்தவர். இதனால் ஊர் பெயரையும் சேர்த்து காடுவெட்டி குரு என அழைக்கப்பட்டார். வன்னிய சமுதாயத்தினர் இவரை ‘மாவீரன் குரு’ என்று அழைப்பார்கள்.இவரது தந்தை ஜெயராமன் படையாட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருந்தவர்.காடுவெட்டி குரு சிறிய வயதாக இருக்கும் போதே அவரது தந்தை ஜெயராமன் படுகொலை செய்யப்பட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ் இவருக்கு நெருங்கிய உறவினர். இதனால் பாமகவில் சேர்ந்தார்.பின்னர் வன்னியர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். 2001ல் ஆண்டிமடம் தொகுதியிலிருந்தும் 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த 2018 அன்று குரு உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.