×

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். கொரோனா ஊரடங்கால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. அதன்படி கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை யாரேனும் திறந்திருக்கிறார்களா என்று பார்க்க காவல் துறையினர் சென்றனர். அப்போது ஜெயராஜின் கடை திறந்திருந்தது. இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது இருவரும் இறந்துவிட்டனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். கொரோனா ஊரடங்கால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. அதன்படி கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை யாரேனும் திறந்திருக்கிறார்களா என்று பார்க்க காவல் துறையினர் சென்றனர். அப்போது ஜெயராஜின் கடை திறந்திருந்தது. இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது இருவரும் இறந்துவிட்டனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.

இந்நிலையில் சாத்தான் குளத்தில் கடை வைத்திருக்கும் ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு திமுக இளைஞரை செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக இளைஞரணி சார்பில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் பயமாகவும் பதட்டமாகவும் உள்ளது. இரண்டு பேரை அடித்து கொலை செய்ததற்கு அதிமுக அரசு பொறுப்பேற்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற இன்னொரு கொலை நடக்க கூடாது என்பது தான் திமுகவின் கருத்து.யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர்.அங்கு சமூக இடைவேளி, முககவசம் என எதும் இல்லாத சூழலில் போலீஸார் கண்டுகொள்வதில்லை. முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வழக்கு திமுக தொடரும்” என தெரிவித்தார்.