×

இ பாஸ் எடுக்காமே தான தூத்துக்குடிக்கு போனீங்க! அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி பதிலடி

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முறையாக அனுமதி பெற்றே தூத்துக்குடிக்கு சென்றிருக்க வேண்டும். இது சமுதாய பிரச்சனை. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். பாஸ் பெறாமல் சென்றது குறித்து உதயநிதி பதிலளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். ‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி,
 

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முறையாக அனுமதி பெற்றே தூத்துக்குடிக்கு சென்றிருக்க வேண்டும். இது சமுதாய பிரச்சனை. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். பாஸ் பெறாமல் சென்றது குறித்து உதயநிதி பதிலளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

 

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என பதிலடிக் கொடுத்துள்ளார்.