×

எடப்பாடி பழனிசாமி ரூ.6,200 கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளா காட்டுப்புத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மோடியின் எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. கல்வி மாநிலங்களின் உரிமை என்றவர் ஜெயலலிதா. அனைத்து திட்டங்களிலும் முதலிடம் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் ஊழலில் மட்டும்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி 6,200 கோடி ரூபாய் ஊழல் செய்து தனது சொந்த சம்பந்திக்கு
 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளா காட்டுப்புத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மோடியின் எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. கல்வி மாநிலங்களின் உரிமை என்றவர் ஜெயலலிதா. அனைத்து திட்டங்களிலும் முதலிடம் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் ஊழலில் மட்டும்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி 6,200 கோடி ரூபாய் ஊழல் செய்து தனது சொந்த சம்பந்திக்கு கொடுத்துள்ளார்” எனக் கூறினார்.

எனது தாத்தா மு.கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரயில் நிலையத்தை முதல் முறையாக பார்வையிடுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது. இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல. இந்தி மொழி திணிப்புக்கு தான் எதிரி. பெரியப்பா மு.க அழகிரி எதிர்ப்பு குறித்த செய்திகள் எனக்கு தெரியாது. நான் அந்த செய்தியை பார்க்கவில்லை என்றார். கட்சியில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தருணங்களில், எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு அழகிரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.