×

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உதவியாளரை நலம் விசாரித்த உதயநிதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதிஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதிஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.