×

நான் மற்றவர்களுக்கு முன்னுதாரணமா? உதயநிதி ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோரி கல்லூரி வளாகத்தில் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா பாதிப்பால் தமிழகம் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பணியாற்றியது மட்டும் அல்லாமல் மக்களின் ஒத்துழைப்பால் பாதிப்பு
 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோரி கல்லூரி வளாகத்தில் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா பாதிப்பால் தமிழகம் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பணியாற்றியது மட்டும் அல்லாமல் மக்களின் ஒத்துழைப்பால் பாதிப்பு இப்போது குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான். அதனால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை அனுப்பி வைக்க வேண்டும். நான் எந்நேரமும் ஓடுகிறேன் முன்னுதாரணமாக இருக்கிறேன் என்றார்கள். நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பவர் நம் முதல்வர் தான்” எனக் கூறினார்.