×

அம்மா உணவகத்தில் சாப்பாட்டின் தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களின் குறை கேட்டு வருகிறார். அதேபோல் சிந்தாரிப்பேட்டை ,ராயப்பேட்டை, ஜாம்பஜார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் அவர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி பகுதி காட்டு கோவில் தெரு அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி சாப்பாட்டின் தரத்தை அறிய அங்குள்ள உணவை சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் உணவகத்தை தூய்மையாக
 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களின் குறை கேட்டு வருகிறார். அதேபோல் சிந்தாரிப்பேட்டை ,ராயப்பேட்டை, ஜாம்பஜார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் அவர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி பகுதி காட்டு கோவில் தெரு அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி சாப்பாட்டின் தரத்தை அறிய அங்குள்ள உணவை சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் உணவகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அங்குள்ள சமையலுக்கு தேவையான தினசரி வருவாய் பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.அத்துடன் திருவல்லிக்கேணி பகுதி, 119 அ வட்டம், VM தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களை வழங்கினார்.

திருவல்லிக்கேணி, அப்பாவு தெரு பகுதியை சேர்ந்த சிறுவன் முகமது அஷ்ரிக்(15) தன்னுடைய சேமிப்பு தொகை ரூ.5,500, கோவர்தன் தெரு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சகோதரி அம்பிகை ரூ.15 ஆயிரம், ராயப்பேட்டையைச் சேர்ந்த அய்யா பாலசுந்தரம் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 ஆயிரம் என பலரும் உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா தடுப்பு நவவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்தனர்.