×

‘உடனடியாக சொத்துவரி செலுத்துமாறு மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது’… டிடிவி தினகரன் பதிவு

கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் கடந்த ஏப்ரல் மாதமே செலுத்த வேண்டிய கடந்த ஜூன் மாதம் சொத்து வரிக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், சென்னையில் சொத்துவரியைச் செலுத்தாத மக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையாத இந்த சூழலில் சொத்து வரி செலுத்துமாறு மாநகராட்சி அறிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்து அமமுக
 

கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் கடந்த ஏப்ரல் மாதமே செலுத்த வேண்டிய கடந்த ஜூன் மாதம் சொத்து வரிக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், சென்னையில் சொத்துவரியைச் செலுத்தாத மக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையாத இந்த சூழலில் சொத்து வரி செலுத்துமாறு மாநகராட்சி அறிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னையில் கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

மக்கள் படும் துயரத்தைக் கருத்தில்கொண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவைக் குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையிலாவது நீட்டிக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.#ChennaiCorporation” என்று குறிப்பிட்டுள்ளார்.