×

“உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் ” டிடிவி தினகரன் காட்டம்!

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் சுணக்கம் காட்டி வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். காரணம் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை . மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் இன்னும் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை
 

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் சுணக்கம் காட்டி வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். காரணம் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை .

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் இன்னும் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது. ஜப்பான் ஜைக்கா நிறுவனங்களிடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைத்த பின்னரே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

‘பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்’, ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா?

இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்”என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரை பார்த்து எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும் பயமல்ல; கொரோனாவுக்கும் பயம் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.