×

காவலர்களை போன்று முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? – டிடிவி தினகரன்

சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது : மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாக பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்கு கொடுத்தது யார் என்பதை பழனிசாமி அரசு விளக்க வேண்டும் !@CMOTamilNadu pic.twitter.com/Q1xfWupccc — TTV Dhinakaran (@TTVDhinakaran) June 30, 2020 இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாக
 

சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாக பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்கு கொடுத்தது யார் என்பதை பழனிசாமி அரசு விளக்க வேண்டும். மாஜிஸ்திரேட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா?. சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருப்பதைப் போன்று தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் அழிக்கவோ, மாற்றவோ இடம் கொடுக்காமல் இருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.