×

“புது எழுச்சியையும் கனவுகளையும் விதைத்த மாமனிதர்” டிடிவி தினகரன் ட்வீட்!

அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாட்டின் குடியரசுத்தலைவர் அரியணையில் ஏறியவர் ஏ.பி. ஜே. அப்துல் காலம். பிரதமரின் அறிவியல் ஆலோசகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், (ISRO) விண்வெளி பொறியாளர் என பல முக்கிய பொறுப்பு வகித்தவர். கடந்த 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக
 

அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாட்டின் குடியரசுத்தலைவர் அரியணையில் ஏறியவர் ஏ.பி. ஜே. அப்துல் காலம். பிரதமரின் அறிவியல் ஆலோசகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், (ISRO) விண்வெளி பொறியாளர் என பல முக்கிய பொறுப்பு வகித்தவர். கடந்த 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்களின் கதாநாயகனாக விளங்கிய அப்துல் கலாம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள் – மாணவர்களின் இதய நாயகன், அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் புது எழுச்சியையும் கனவுகளையும் விதைத்த மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று! ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் ஏவுகணை விஞ்ஞானியாக உயர்ந்து, எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்த இந்திய குடியரசுத் தலைவராக திகழ்ந்து டாக்டர் கலாம் அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.