×

திருச்சி மாணவி கொல்லப்பட்ட வழக்கு – கூடுதலாக 9 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி 9ம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக், துணை காண்பாணிப்பாளர் கோகிலா உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்த
 

திருச்சி 9ம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக், துணை காண்பாணிப்பாளர் கோகிலா உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
இந்த வழக்கில் நேற்று மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டனர். சிறுமி கொல்லப்பட்ட காரணம் என்ன என்று புரியாத காரணத்தால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஊர் மக்கள், உறவினர்கள் என்று பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Source: Vikatan

இவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதைத் தொடர்ந்து கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த 11 தனிப்படைகளும் மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் தலைமையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது