×

“நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பாஜக ஆட்சியில் கேள்விக்குறியாகியுள்ளது”

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை அலுவல் ஆய்வு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றார். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “மத்திய அரசின் பிடிவாதமே நாடாளுமன்றம் இயல்புநிலைக்கு திரும்பாததற்கு காரணம். மக்கள் விரோத சட்டங்களை அவரச அவசரமாக நிறைவேற்ற மழைக்கால கூட்டத்தொடரின் அமளி நேரங்களை மத்திய அரசு பயன்படுத்தி கொள்கிறது.நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பாஜக ஆட்சியில் கேள்விக்குறி ஆகியுள்ளது. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின்
 

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை அலுவல் ஆய்வு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “மத்திய அரசின் பிடிவாதமே நாடாளுமன்றம் இயல்புநிலைக்கு திரும்பாததற்கு காரணம். மக்கள் விரோத சட்டங்களை அவரச அவசரமாக நிறைவேற்ற மழைக்கால கூட்டத்தொடரின் அமளி நேரங்களை மத்திய அரசு பயன்படுத்தி கொள்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பாஜக ஆட்சியில் கேள்விக்குறி ஆகியுள்ளது. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் நெறிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நாடாளுமன்றமான இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் நெறிக்கப்படுகிறது

முதலில் பிரதமர் அவைக்கு வரவேண்டும். எவ்வளவு செலவு ஆகிறது என்பது அடுத்தகட்டம், செலவு செய்யும் பணம் வீனாகுவதற்கு காரணம் ஆளும் கட்சி தான், அவை முடக்கத்திற்கு ஆளும் கட்சி மட்டுமே காரணம். அவையில் பெகசஸ் விவகாரம் தொடர்பாக பேசமுடியாது என ஆளுங்கட்சியினர் உறுதியாகவுள்ளனர்” எனக் கூறினார்.