×

ஊரடங்கா சொல்லவே இல்ல! ஜாலியாக சுற்றி திரிந்த 620 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 4 மணிவரை இரவு ஊரடங்கு ம், அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 30 மணி நேரம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. குறிப்பாக முழு ஊரடங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திருச்சி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 450க்கும் மேற்பட்ட காவலர்கள்
 

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 4 மணிவரை இரவு ஊரடங்கு ம், அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 30 மணி நேரம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.

குறிப்பாக முழு ஊரடங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திருச்சி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 450க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 8 சோதனை சாவடிகள் மற்றும் 24 தற்காலிக சோதனைச் சாவடிகள், 32 இடங்களில் போலீசார் ஊரடங்கு முறையாக பின்பற்றப் படுகிறதா என ரோந்து வாகனங்களில் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் திருச்சியில் முழு ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிந்த 620 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்ற பிரிவின் கீழ் 57 வழக்குகளும், வணிக வளாகங்கள் இரண்டின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.