×

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு அஞ்சலி!

சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதி தேதி உடல் நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு பாலமுரளிக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார்.
 

சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் தேதி தேதி உடல் நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு பாலமுரளிக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் பாலமுரளி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்டோர் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.