×

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் 8 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தடையானது இன்று முதல் நீக்கப்பட்டு பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி
 

குற்றால அருவிகளில் 8 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தடையானது இன்று முதல் நீக்கப்பட்டு பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாளில் அனைத்து நேரங்களிலும் அருவிகளில் குளிக்கலாம் என்ற நிலை மாறி நேர கட்டுப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண் , பெண் குளிக்க அனுமதி அளிக்கப்படும் போது தனிமனித இடைவெளியை கடைபிடித்து குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளும், பயணிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.