×

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் ஆனா பழைய கட்டணம்தான்!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மே 31 ஆம் தேதிவரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் தற்போது மேலும்
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மே 31 ஆம் தேதிவரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் தற்போது மேலும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்துள்ள தமிழக அரசு, 50% பயணிகளுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் அரசு பேருந்தை இயக்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிமுறையின்படி மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அனுமதி இல்லை எனவும் தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.