×

இன்றும் குறைந்தது தங்க விலை; இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!

ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்க விலை, கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. சுமார் ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை ரூ. 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்து மீண்டும் 40 ஆயிரத்தில் நீடிக்கிறது. தங்க விலை மட்டுமில்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த
 

ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்க விலை, கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. சுமார் ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை ரூ. 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்து மீண்டும் 40 ஆயிரத்தில் நீடிக்கிறது. தங்க விலை மட்டுமில்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் இன்று தங்க விலை சற்று குறைந்துள்ளது.

gold jewelry background / soft selective focus

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,071க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,566க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.