×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான
 

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும்
சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.