×

டிக் டாக் ‘ரவுடி பேபி’ சூர்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி!

டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகர் பகுதியில் வசித்து வரும் இவர் டிக்டாக்கில் செய்த அட்டூழியத்தால் மிக விரைவில் பிரபலமானார். டிக் டாக்கில் சினிமா வசனம், நடனம் என்பதைத் தாண்டி ஆபாசம், கவர்ச்சி என பிரபலமான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த சூர்யா கொரோனா பாதிப்பு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதை
 

டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகர் பகுதியில் வசித்து வரும் இவர் டிக்டாக்கில் செய்த அட்டூழியத்தால் மிக விரைவில் பிரபலமானார். டிக் டாக்கில் சினிமா வசனம், நடனம் என்பதைத் தாண்டி ஆபாசம், கவர்ச்சி என பிரபலமான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர்.

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த சூர்யா கொரோனா பாதிப்பு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதை அறிந்த அரசு சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஏற்பாட்டின் மூலம் தமிழகம் வந்த சூர்யா கடந்த 16ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

கொரோனா அச்சம் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் போலீசாருக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் சூர்யா சிங்கப்பூரில் வந்திருந்த தகவலை தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சூர்யாவை தனிமைப்படுத்த அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் அவரோ தனக்கு கோவையில் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டது அதனால், தான் ஆம்புலன்சில் ஏறமாட்டேன் . தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வருவதாக தெரிவித்தார்.

மேலும் தான் ஏசி அறையிலேயே இருந்து விட்டேன். அதனால் எனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்ய முடியாமல் போனது. மீண்டும் இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதுகுறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி செய்தியாளர் செய்தி வெளியிட்டதால் அவருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் சூர்யா சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட நிருபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார் சூர்யா மீது ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் டிக் டாக் சூர்யா இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.