×

தமிழகத்திலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க அரசாணை : எம்பி திருமாவளவன் வரவேற்பு!

2018- 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மாணியக்கோரிக்கையின் படி தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. உதாரணமாக எழும்புரை ஆங்கிலத்தில் எக்மோர் எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்படுகிறது. திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமைய அரசாணை வழி செய்கிறது. இதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, செலவினமாக
 

2018- 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மாணியக்கோரிக்கையின் படி தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

உதாரணமாக எழும்புரை ஆங்கிலத்தில் எக்மோர் எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்படுகிறது. திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமைய அரசாணை வழி செய்கிறது. இதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, செலவினமாக ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எம்பி திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இது வரவேற்கத் தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. ADAYAR( அடையார்) என எழுதுவதை இனியாவது ADAIYAARU (அடையாறு)எனவும் PALAR(பாலார்) என எழுதுவதை PAALAARU( பாலாறு) எனவும் எழுதட்டும். Portonovo என்பதை PARANGIPETTAI (பரங்கிப்பேட்டை) என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.